என்னதான் செய்திருக்கிறார்கள் பார்க்கலாமே என்று போனேன். பரவாயில்லை. கில்லி மாதிரி தமிழில் இன்னொரு படம். கில்லியாவது தெலுங்கு படத்தை ரீமேக் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு செய்தார்கள். ஆனால் இவர்கள் நைசாக ஒரு ஆங்கிலப் படத்தை லவட்டி விட்டார்கள். Catch Me If you Can என்ற ஆங்கிலப் படம். Leonardo DiCaprio நடித்து Steven Spielburg இயக்கிய படம். அதை அப்படியே சுட்டு விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் படத்தில் ஒரு காட்சியில் ஒரு இயக்குனர் சூர்யாவிடம் வந்து பேங்க் கொள்ளையை பற்றிய ஒரு சீன் தன் படத்தில் வைக்கப்போவதாகவும் அதை எடுப்பதற்கு (சுடுவதற்கு) பேங்க் கொள்ளையை மையப்படுத்தி வந்த சில ஆங்கிலப் படங்களின் பெயர்களையும் கேட்டுக்கொண்டு செல்வார். மற்ற இயக்குனர்களை கிண்டல் செய்கிறார்களா? அல்லது தாங்களும் அந்த குட்டையில் தான் இருக்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறார்களா? படத்தில் இருந்த மிக அருமையான ஒரு மெலடி பாடலை இரண்டாம் பாதியில் படம் வெகு வேகமாக சென்று கொண்டிருக்கும் போது போட்டுத் தொலைத்து ஒரு பிரேக் அடிக்கிறார்கள். கடத்தலுக்கு உபயோகிக்கும் முறைகள் எல்லாம் தாத்தா காலத்து டெக்னிக்குகள்(பிள்ளையார் சிலையை தவிர). கொஞ்சம் யோசித்திருக்கலாம். சூர்யா நன்றாகவே உழைத்திருக்கிறார். பிரபு வழக்கம் போல் செய்திருக்கிறார். வில்லன் சுமார்தான். கேமராவும் சண்டைகாட்சிகளும் அசத்தல். படத்தின் ரியல் ஹீரோ கேமராதான் (கேமராமேன் வேலையை கே.வி.ஆனந்த் செய்யவில்லை). சும்மா இரண்டரை மணி நேரம் பொழுது போக வேண்டும் என்பவர்கள் தாராளமாக பார்க்கலாம். Guarenteed.
Catch Me If You Can-ஐ பற்றி.
பள்ளியில் படிக்கும் சிறுவன்(16) தன் பெற்றோரின் விவாகரத்தால் செல்லும் இடம் தெரியாமல் தவிக்கிறான். தன் தந்தை தனக்காக ஆரம்பித்த பேங்க் அக்கௌண்டில் பணம் இல்லாமல் போகவே போலி செக் தயாரித்து மோசடி செய்கிறான். செக் மோசடியையே மேலும் விஸ்தரித்து பைலட், டாக்டர், லாயர் என்று பெரிய அளவில் செல்கிறான். அவனை துரத்தும் ஒரு போலிஸ்காரர்(FBI) இறுதியில் அவனை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார். அதன் பின்னர் நடக்கும் சில செக் மோசடிகளில் அந்த அதிகாரிக்கு இந்த சிறுவனின் உதவி தேவைப்படுகிறது. (பாம்பின் கால் பாம்பறியும் -Concept) எனவே அவனை அரசு உத்தரவுகளுடன் தனக்கு உதவியாளனாக செக் மோசடிகளை புலனாய்வு செய்யும் FBI யின் ஒரு பிரிவில் வேளையில் அமர்த்துகிறார். (கொசுறு: இது ஒரு உண்மை கதையாம். அவர்(சிறுவன்) இன்னமும் அங்கே வேலை செய்கிறாராம்).
இதையே கதையாக வைத்துக் கொண்டு செக் மோசடிக்கு பதிலாக International Smuggling என கிளம்பி விட்டார்கள். (இன்னொரு கொசுறு: படத்தின் ஆரம்பத்தில் வரும் வைரக் கடத்தல் சம்பந்தமான விஷயங்கள் எல்லாம் Blood Diamond என்ற இன்னொரு Leonardo DiCaprio படத்தில் இருந்து சுட்டவை).

கொசுறு 3: (முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது). படத்தில் காட்டப்படும் சர்ச்சைக்குரிய வைரங்கள் பற்றிய விக்கிபீடியாவின் ஒரு குறிப்பு இங்கே.
ஷாகுல்,
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கேங்க.
நான் அந்த கேட்ச் மீ இப் யூ கேன் என்ற படத்தை பல முறை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்த அயன் படத்தை இன்னமும் பார்க்கவில்லை. பார்த்தால் தான் சொல்ல முடியும்.
//அல்லது தாங்களும் அந்த குட்டையில் தான் இருக்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறார்களா? // சூப்பர்.
தொடர்ந்து எழுதுங்கள் ஷாகுல்.
நன்றி.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
வந்தமைக்கு நன்றி விஷ்வா
ReplyDelete